பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம்Aa Cc Td Yyo P10d JjlI Eehw X.0sw67Zzpcfu
பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் | |
---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலய காட்டுப்பகுதி | |
அமைவிடம் | பாலக்காடு மாவட்டம் , கேரளம், இந்தியா |
கிட்டிய நகரம் | பாலக்காடு (90 km)[1] |
பரப்பளவு | 285 சதுர கிலோமீட்டர்கள் (110 sq mi) |
நிறுவப்பட்டது | 1973 |
நிருவாக அமைப்பு | Kerala Forest Dept. |
வலைத்தளம் | www.parambikulam.org |
பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் (Parambikulam Wildlife Sanctuary) இது தென் இந்தியாவின் கேரளம் மாநிலத்தில் சிற்றூர் தாலுகாவிற்கு உட்பட்ட 391 சதுர கிலோ மீற்றர்களுடன் 391 சதுர கிலோமீட்டர்கள் (151.0 sq mi) பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு இடம் ஆகும். 1973 ஆம் ஆண்டு 285 சதுர கிலோ மீற்றர்களுடன் 285 சதுர கிலோமீட்டர்கள் (110 sq mi) இப்பகுதி துவங்கப்பட்டது. இது ஆனை மலைக்கும் நெல்லியம்பதி மலைக்கும் (Nelliampathi) இடையில் ஆய பாதை (Toll road) அமைந்துள்ள இடத்தில் உள்ளது. இதன் அருகில் 2010 பிப்ரவரி 19 அன்று பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் உருவாகப்பட்டது. இதன் இடைப்பட்ட பகுதியில்தான் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் [2][3][4] 643.66 km2.அமைந்துள்ளது. யுனெஸ்கோ அறிவித்துள்ள உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளவையில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மற்றும் ஆனைமலை திரளும் (Annamalai Sub-Cluster) சேரும். [5] இப்பகுதியில் நான்கு வகையான மலைவாழ் மக்கள் முதுவர், மலை மலசர் (malai malasar), மலைசர் (Malasar) மற்றும் காடர் போன்றோர் பல தொகுப்புகளாக வாழ்கிறார்கள். [6] இங்கு வன மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களைக்கொண்டே மலைஏற்றத்திற்கு வழிகாட்டிகளாகவும், யானை சவாரிக்கு உதவுபவர்களாகவும் பயிர்ச்சி கொடுக்கப்பட்டு வேலையும் கொடுக்கப்பட்டுவருகிறது. [7] இங்கு வாழும் புலிகளைப் பாதுகாக்க பல்வேறு தனியார் நிறுவனங்கள் உதவி செய்கின்றன.[8]
பொருளடக்கம்
- 1 நிலவியல்
- 2 வரலாறு
- 3 பார்வையாளர்களுக்கான தகவல்கள்
- 4 உயிரினங்கள்
- 5 தாவரங்கள்
- 6 அச்சுறுத்தல்கள்
- 7 மேற்கோள்கள்
நிலவியல்[தொகு]
இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி தேசியப்பூங்காவிற்கு அருகில் நிலநேர்க்கோட்டின் கணக்குப்படி:76° 35’- 76° 50’ கி, மற்றும் நிலநேர்க்கோடின் கணக்குப்படி :10° 20’– 10° 26’ வ முதல் பாலக்காடு நகரம் வரை 135 கிலோமீட்டர்கள் (84 mi) அமைந்துள்ளது. இது வடக்கே பாலக்காடு மாவட்டத்தின் நெம்மரா காடுகள் (Nemmara Forest) முதல் தெற்கே வழாசல் காடுகள் (Vazhachal Forest) வரையிலும் மேற்கே திருச்சூர் மாவட்டத்தின் சாலக்குடி வரையிலும் வரவியுள்ளது. இங்கு காணப்படும் நிலப்பகுதியில் பச்சைநிறக் கனிப்பொருள் வகை (hornblende), கறுப்பு அப்ரகம் (biotite), மற்றும் சார்னோக்கைட்டு (charnockite) போன்ற படிமங்கள் கிடைக்கின்றன.contact :8220000820
நெல்லியம்பதி மலையிலிருந்து ஆனைமலை வரை 600 மீற்றர்கள் உயரத்துடன் இதன் வடக்கு எல்லையான தோத்தப்பாறை வரை அமைந்துள்ளது. இப்பகுதியிலேயே பெரிய மலையாகச் சபரிமலை (1438 மீற்றர்கள்) தெற்கு எல்லையாகவும், இதன் வடக்கு எல்லையாக பன்டாரவரை (1290 மீற்ரர்கள்) என்ற பகுதியும் அமைந்துள்ளது. மேலும் குச்சிமுடி, வெங்கோலிமலை, புலியரைபாதம் போன்ற மலைப்பகுதியியும் அமைந்துள்ளது.
இங்கு காணப்படும் விலங்குகளின் சரணாலயத்தில் 20.66 கிலோ மீற்றர்கள் இடத்தில் பரபிகுளம், தோனகடவு, மற்றும் பெருவாரிபள்ளம் போன்ற மூன்றும் சேர்ந்து மனிதனால் உருவாகப்பட்டதாகும். இதன் நுழைவு வாயிலில் தான் துவையர் நீர்வீழ்ச்சி (Thuvaiar water falls) அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உடபட்ட இடத்தில் 7 பெரிய பள்ளத்தாக்குகளும், 3 ஆறுகளும், தேக்கடி, பரம்பிக்குளம் அணை (Parambikulam Dam) மற்றும் சோலையாறு அணையும் அமைந்துள்ளது. இங்கு காரபாரா ஆறு (Karappara river), மற்றும் குரியர்குட்டி ஆறு (Kuriarkutty river) போன்றவை வடிகால் பகுதியாக உள்ளது.
வரலாறு[தொகு]
இங்கு இருக்கும் மலைப்பகுதியின் உயரம் 300 மீ முதல் 1438 மீ வரை உள்ளது. இது கொச்சி மாநிலத்தின் பகுதியான இங்கு டிராம் தயாரிப்புக்கும், கப்பல் கட்டுவதற்கும் மரம் வெட்ட உதவிய பகுதியாகும். இதன் அறுகில் அமைந்துள்ள கொச்சி கப்பல் துறைமுகத்தின் (Harbor) உதவியுடம் உலகின் பல பகுதிகளுக்கும் மரங்கள் வெட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்திருக்கிறார்கள்.
பார்வையாளர்களுக்கான தகவல்கள்[தொகு]
புலிகளின் பாதுகாப்புப் பகுதிக்கு இடைப்பட்ட இப்பகுதி சூழலியல் சுற்றுலா (Ecotourism) துறைக்கான சிறந்த இடமாக விளங்குகிறது. இயற்கை சார்ந்த படிப்புக்காக (nature education) வாய்ப்புகள் ஏறாலமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக இவை விளங்குகிறது. இங்கு பல நாட்டிலிருந்து மலைஏற்ற (Backpacking (wilderness)) வீரர்கள் வந்து அவர்களுக்கு கிடைத்த புதிய புதிய பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து செல்கிறார்கள். இங்கு மூங்கிலால் செய்த படகில் சவாரி செய்து புதிய அனுபவத்தைப்பெறலாம். இப்பகுதியில் இருக்கும் படகுதுறையிலிருந்து கிடைக்கும் தண்ணீர் குடிப்பதற்கு பயன்படுவதால் இன்கு மோட்டார் படகு விடப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இங்கு வாழும் உள்ளூர் வாசிகள் மட்டும் மீன்பிடிப்பதற்கு நாட்டு படகுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சுற்றுலாப் பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. இங்கு தேக்கு மரங்கள் ஆசியாவிலேயே அதிக அளவு காணப்படுகிறது. இங்கு அமைந்துள்ள தீவுப்பகுதியில் பெரிய மரங்களின்மேல் வீடுகள் கட்டி வாடகைக்கு விடப்படுகிறது. இதற்காக முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான விவரங்கள் இவர்களின் அலுவலக இணைய தளத்தில் பார்த்துக்கொள்ளலாம். இதைத்தவிர்த்து வேறு தனி ஆட்களிடம் பதிவு செய்து ஏமாறவேண்டாம் என்று அறிவுருத்தப்படுகிறார்கள். இங்கு வருபவர்கள் சுற்றிப்பர்க்க ஏதுவாக சபாரி வாகனங்களைக் காடுகள் துறை வழங்குகிறது. தனியாரின் இரண்டு சக்கரவாகனம் தவிர்த்து நான்கு சக்கர வாகனம் அனுமதிக்கப்படுகிறது.
தமிழ் நாட்டின் பொள்ளாச்சி நகரிலிருந்து இப்பகுதிக்கு கேரளா போக்குவரத்துக்கழகம் வாகனங்களை இயக்குகிறது. பொள்ளாச்சிக்கும் பரப்பிகுளத்திற்கும் இடைப்பட்ட தூரம் 65 கிலோ மீற்றர்கள் மட்டுமே. இதன் அருகில் இருக்கும் தொடருந்து நிலையம் பொள்ளாச்சி, மற்றும் 40 கிலோ மீற்றர்களுக்குள் வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் அமைந்துள்ளது.
உயிரினங்கள்[தொகு]
பரப்பிக்குளப் பகுதியான இப்பகுதி உயிரியற் பல்வகைமை மையமாக விளங்குவதால் பாலூட்டிகள் சோலைமந்திகள், நீலகிரி வரையாடுகள், இந்திய யானைகள், வங்காளப் புலிகள், இந்தியச் சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், கடமான்கள், குல்லாய் குரங்குகள் , நீலகிரி மந்திகள், தேன் கரடிகள், நீலகிரி மார்ட்டின்கள், திருவாங்கூர் பறக்கும் அணில்கள் மற்றும் கடமா என 39 வகையும், நீர்நில வாழ்வன 16 வகைகளும், சிறுத்த பெருநாரை, சாம்பல் தலை மீன்பிடிக் கழுகு, பொன்முதுகு மரங்கொத்தி, பாம்புத் தாரா, சின்ன நீர்க்காகம்,மலை இருவாட்சி, செம்மீசைச் சின்னான், கரும்பருந்து, சிறிய மீன் கழுகு, அதீனா மீன் கழுகு, கிழக்கத்திய விரிகுடா ஆந்தை, கறுவாக் காடை, கருப்பு மரங்கொத்தி, மற்றும் கருப்புத்தலை மீன்கொத்தி என 268 வகை பறவைகள் காணப்படுகின்றன. மேலும் ஊர்வன, கருநாகம், கேரளா வாலாட்டி பாம்புகள், திருவாங்கூர் குக்குரி பாம்பு, திருவாங்கூர் ஓநாய் பாம்பு, கொச்சி பிரம்பு ஆமை, கல் ஆமை, இந்திய கரட்டைப் பல்லி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பறக்கும் பல்லியோந்திகள் என 61 வகைகளும், மீன்கள் 47 வகைகளும், பூச்சிகள் 1049 வகைகளும், மற்றும் பட்டாம்பூச்சிகள் 124 வகைகளும் காணப்படுகின்றன. ஏற்கனவே இப்பகுதி பாரம்பரிய காட்டெருமை வாழும் பகுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் அகணிய உயிரியான தவளை போன்ற நீர்நில வாழ்வன 23 வகைகள் காணப்படுகின்றன.
தாவரங்கள்[தொகு]
இங்கு பல வகையான மரங்கள் காணப்படுகிறது. இவற்றுள் இங்கு காணப்படும் கண்ணிமரா தேக்கு மரம் (Kannimara Teak) 450 ஆண்டுகள் வயதுடையது ஆகும். இப்பகுதியின் சுற்றுச்சூழலுக்காக சூழல் விருதான மகாரிச்கா புரஸ்கார் விருதை இந்திய அரசு வழங்கியுள்ளது.
அச்சுறுத்தல்கள்[தொகு]
காட்டுத் தீ- 2007 ஆம் ஆண்டு இங்கும் இதனைச் சுற்றியுள்ள 100 ஏக்கரில் தீ பற்றிக்கொண்டது. இதனால் பல விலங்குகள் தீக்கு இரையாகின. இதற்கு காரணமாக இங்கு முன்கூட்டியே பெய்யவேண்டிய மழை பெய்யாததே என்று கூறப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு சனவரி, பிப்ரவர், மார்ச், மற்றும் ஏப்ரல் மாதங்களில் மழை பெய்யவேண்டும். ஆனால் சனவரி மாதம் மட்டும் 4 மிமி, மழை மட்டுமே பெய்தது. அதற்குப் பின்னர் மழை எதுவும் பெய்யவில்லை. இந்த காலகட்டத்தில் இப்பகுதி முன் எப்போதும் இல்லாத வறட்சியை இந்த கோடைகாலம் எதிர் கொண்டது. அப்போது குறைந்த பட்சம் 26oC இருக்கவேண்டிய வெயில் ஏப்ரல் மாதமே 34oC ஆக இருந்தது.[9]
சுற்றுலா பயணிகளின் வருகையால் அதிகரிக்கும் கழிவுகள் - இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவாக பிளாஸ்டிக் கழிவுகளையும், அலுமினியக் கழிவுகளையும் விட்டுச் செல்லுவதால் காடுகள் சீர் கேடு அடைகிறது.
சுற்றுலாத் தள விரிவாக்கத் தேவை அதிகரிப்பு - இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக புலிகள் சரணாலயப்பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவது, சாலை அமைப்பது போன்ற செயல்களால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது.[10][11]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Map", GMap (Google), https://www.google.co.in/maps/dir/Palakkad,+Kerala/Parambikulam+Tiger+Reserve,+Anappady,+Thunakadavu+P.O,+Parambikulam,+Kerala+678+661/@10.5900019,76.6475489,11z/data=!4m13!4m12!1m5!1m1!1s0x3ba86dfa087d31ad:0xf542d6eb7a870a56!2m2!1d76.6547932!2d10.7867303!1m5!1m1!1s0x3ba81db91f990ee1:0xbe2bd65c610576c4!2m2!1d76.775622!2d10.392858
- ↑ staff (2010-02-20), "Parambikulam Tiger Reserve opened", The Hindu, http://www.hindu.com/2010/02/20/stories/2010022063832000.htm, பார்த்த நாள்: 2011-01-19
- ↑ "Parambikulam Tiger Reserve to be inaugurated on Feb. 17". Palakkad: The Hindu. 2009-11-24. http://www.thehindu.com/news/national/kerala/article54227.ece. பார்த்த நாள்: 24 November 2009.
- ↑ "Parambikkulam likely to become a tiger reserve soon". The Hindu (October 3, 2007). பார்த்த நாள் 2008-09-02.
- ↑ UNESCO, World Heritage sites, Tentative lists, Western Ghats sub cluster, Niligiris. retrieved 4/20/2007 World Heritage sites, Tentative lists
- ↑ "These tribal guides ‘shoot’ for a change". The Hindu. 2015-07-02. http://www.thehindu.com/news/national/kerala/these-tribal-guides-shoot-for-a-change/article7377045.ece.
- ↑ "Where tigers, tribes coexist". The Hindu. 2015-07-29. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/where-tigers-tribes-coexist/article7476001.ece.
- ↑ "Enforcement agencies gear up to fight wildlife crime in Kerala". பார்த்த நாள் 2015-10-20.
- ↑ Prabhakaran G. (4/9/2007) Fire engulfs Parambikulam, Nelliampathy forests, The Hindu, retrieved 6/12/2007 Fire
- ↑ "Travel News - KFRI opposes plan for motorable road from Nelliyampathy to Parambikulam Tiger Reserve | TravelBiz Monitor". பார்த்த நாள் 2015-08-05.
- ↑ "Greens oppose tourism in Nelliampathy forest". The Hindu. 2010-04-22. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article754108.ece.