தொல்பாணியியம்r, Rr Vvc Dy V EeRrYOo 9A lHZu
தொல்பாணியியம் (Primitivism) என்பது, மேல் நாட்டினர் அல்லாத வரலாற்றுக்கு முந்தியகால மக்களின் வடிவங்களைத் தமது ஓவியப் படைப்புக்களில் பயன்படுத்திய ஒரு மேல் நாட்டுக் கலை இயக்கம் ஆகும். பால் கோகின் (Paul Gauguin) தனது ஓவியங்களில் தாகித்தி மக்களின் ஓவியங்களிலும், மட்பாண்டங்களிலும் காணப்பட்ட அலங்கார வடிவங்களைத் தனது ஓவியங்களில் பயன்படுத்தியமை இதற்கு எடுத்துக்காட்டு. தொல்பாணி ஓவியக்கலையில் இருந்து கடன் வாங்கியது நவீன ஓவியத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானது.[1] வேறு கலை இயக்கங்களைச் சேர்ந்த என்றி ரூசோ (Henri Rousseau), மிக்கைல் லரியோனோவ் (Mikhail Larionov), பால் கிளீ (Paul Klee) போன்ற தொழில்முறை ஓவியர்களது ஓவியங்களுக்கும் "தொல்பாணியியம்" என்னும் சொல்லைப் பயன்படுத்துவது உண்டு.
குறிப்புக்கள்[தொகு]
- ↑ Artspoke, Robert Atkins, 1993, ISBN 978-1-55859-388-6
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
- ஓவியத்தின் வரலாறு
- புதிய தொல்பாணியியம்
வெளியிணைப்புக்கள்[தொகு]
- John Zerzan, Telos 124, Why Primitivism?. New York: Telos Press Ltd., Summer 2002. (Telos Press).
- தொல்பாணியியம் தொடர்பான கட்டுரைகள்
- "தொல்பாணியியம் பொருளும் வழிமுறைகளும்"