ஏரி மாவட்டம்atrga
ஏரி மாவட்டம் (தி லேக்சு) | |
இங்கிலாந்தின் தேசியப் பூங்கா | |
வால்லா கிராகிலிருந்து பார்க்கையில்
இசுக்கிட்டா திண்மப் பாறைகள், கெசுவிக் ஊர் மற்றும் டெர்வென்ட் நீர்நிலை | |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
---|---|
உள்ளங்க நாடு | இங்கிலாந்து |
கௌன்ட்டி | கும்பிரியா (முன்னதாக கும்பர்லாந்து, இலங்காசையர் & வெஸ்ட்மோர்லாந்து) |
மாவட்டங்கள் | தெற்கு லேக்லாந்து, ஈடன் பாவட்டம், அல்லர்டேல், கோப்லாந்து, கார்லிசல் |
மிகவுயர் புள்ளி | இசுகாஃபெல் பைக் (978மீ) |
மிகத்தாழ் புள்ளி | கடல் மட்டம் |
- உயர்வு | மீ (. அடி) |
பரப்பு | 2,292 கிமீ² (885 ச.மைல்) |
தாவரங்கள் | டிரோசெரா, பிங்கிகுலா |
விலங்குகள் | செம்மான், செவ்வணில், ஃபெல் போனி, ஹெர்ட்விக் ஆடு, சிவப்பு பருந்து, வல்லூறு, ஆர்க்டிக் சார் மீன் |
இங்கிலாந்தின் தேசியப் பூங்கா | 9 மே 1951 |
மேலாண்மை | ஏரி மாவட்ட தேசியப் பூங்கா ஆணையம் |
IUCN category | II - தேசியப் பூங்கா |
|
ஏரி மாவட்டம் (Lake District அல்லது The Lakes அல்லது Lakeland) வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஓர் மலைப்பாங்கான மண்டலம். புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இப்பகுதி இங்குள்ள ஏரிகள், காடுகள், மலைகள் (ஃபெல்கள்) ஆகியவற்றிற்கு மட்டுமல்லாது 19வது நூற்றாண்டின் துவக்க காலத்தில் இங்கு வாழ்ந்திருந்த ஏரி கவிஞர்கள் என அறியப்படும் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் போன்றோரின் கவிதைகளுக்காகவும் எழுத்துக்களுக்காகவும் புகழ்பெற்றுள்ளது.
இப்பகுதி தேசியப் பூங்காவாக மே 9, 1951இல் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில் பீக் மாவட்டத்தை அடுத்து தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது இதுவே ஆகும். ஐக்கிய இராச்சியத்தில் மிகவும் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் தேசியப் பூங்காவாக இது உள்ளது.ஆண்டுக்கு 15.8 மில்லியன் வருகைகளும் ஆண்டுக்கு நாள் வருகையாளர்கள் 23 மில்லியனாகவும் உள்ளது.[1][2]
இங்கிலாந்திலேயே மிக உயர்ந்த சிகரமாகிய இசுகாஃபெல் பைக் இங்குதான் உள்ளது. இங்கிலாந்தின் மிக ஆழமான ஏரியான வெஸ்ட் வாட்டரும் மிக நீளமான ஏரியான வின்டர்மெரியும் இந்த தேசியப் பூங்காவில்தான் உள்ளது.
சான்றுகோள்கள்[தொகு]
- ↑ "National Park facts and figures". nationalparks.gov.uk. http://www.nationalparks.gov.uk/press/factsandfigures.htm. பார்த்த நாள்: 2012-09-01.
- ↑ "Lake District National Park – Home page". Lakedistrict.gov.uk (6 April 2005). பார்த்த நாள் 21 April 2010.
மேல் தகவல்களுக்கு[தொகு]
- Hollingsworth, S. 'The Geology of the Lake District: a review', Proc. Geologists Assoc., 65 (Part 4) 1954
- Moseley, F. Geology of the Lake District, Yorkshire Geologic
வெளி இணைப்புக்கள்[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில் ஏரி மாவட்டம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Lake District Sports
- Cumbria Tourist Board
- Lake District Walks
- Lake District National Park Authority
- Friends of the Lake District